NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் உயிரிழப்பு!

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான 60வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அளவுக்கு அதிகமான போதைப்பொருளோ அல்லது பூச்சிக்கொல்லி மருந்தோ உட்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர் தனது மனைவியுடன் பரண கலஹா வீதி சரசவி உயன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles