NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேஸ்புக்கின் புதிய அப்டேட் என்ன தெரியுமா ?


தொடர்ச்சியாக மெடா கொண்டு வரும் பல அப்டேட்களில் பேஸ்புக் தற்போது ஒரு சிறந்த அப்டேட்டினைக் அறிமுகம் செய்துள்ளது.
Facebook இல் இருக்கும் பெரும்பாலான அம்சங்கள், சிறந்த சமூக ஊடக அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


உதாரணமாக பயன்பாட்டின் புதிய இடைமுகமானது பயன்பாட்டின் பயனர் அனுபவத்தைச் சிறப்பாகவும் எளிமையாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆனால், மெடா நிறுவனம் தற்போது சமூக ஊடகத்தை மையமாகக் கொண்ட அம்சங்களைத் தவிர்த்து மற்ற அம்சங்களின் மீதும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.


குறிப்பாக, அருகிலுள்ள Wi-Fi நெட்வொர்க்குகளைச் சரிபார்க்கும் விருப்பத்தையும், பேஸ்புக் இப்போது அதன் பயனர்களுக்கு வழங்குகிறது.


அதேபோல், பயனர்களின் சாதனத்தின் தற்போதைய இணைய வேகம் எவ்வளவு என்பதை சரிபார்க்க உதவும் இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் அம்சத்தையும் Facebook இப்போது கொண்டுள்ளது.

Share:

Related Articles