NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொசன் பௌர்ணமி தினம் – கண்டியில் விசேட வழிபாடுகள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பல சமய நிகழ்ச்சிகள் கண்டியில் ஆரம்பமாகியுள்ளன.

இதன்படி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேபோல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா விகாரை, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பைரவகந்த விகாரை, கட்டம்பே ராஜோபவனாராம உள்ளிட்ட விகாரைகளிலும் தற்போது சமய நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

Share:

Related Articles