பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை சமோவா அபியா (Samoa Apiya) இல் இடம்பெறவுள்ளது.
“சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எதிர்காலம் – ஆக்கபூர்வமான பொதுநலவாய அமைப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாட்டை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்ளச் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.