NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சுகாதார துறையினர் அந்நாட்டு மக்களுக்கு பன்றி காய்ச்சல் தொடர்பிலான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் முதல்முறையாக மனிதரில் பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரதானியாவின் வடக்கு யார்க்ஷயரில் தனி நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாச பாதிப்பு அறிகுறிகள், லேசான காய்ச்சல் இருந்ததாகவும், ஆனால் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதனுடன் தொடர்புடைய நபர் பன்றிகளுடன் நேரம் செலவிட்டாரா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் 50 பேர்களில் மட்டுமே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2009இல் பன்றிகளில் காணப்படும் ஒருவகை தொற்று பரவலாக மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வடக்கு யார்க்ஷயரின் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமைதுவ அமைப்பு (UKHSA) தெரிவித்துள்ளது.

இதனிடையே, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன், குறிப்பாக வயதானவர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடியவர்கள், பிற சுகாதார நிலைமைகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பன்றிகள் வளர்க்கும் விவசாயிகள் தங்கள் மந்தைகளில் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் தங்கள் உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles