நாட்டில் சீரற்ற காலநிலையால் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் விளையும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாகக் கழிவறைகளிலிருந்து வரும் அழுக்கு நீர் மற்றும் பல அழுக்கு பொருட்கள் தண்ணீரில் கலந்து நிலத்தில் தேங்குவதால் நிலத்தில் விளையும் காய்கறிகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, குறித்த காலப்பகுதியில் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் கொதித்தாறிய நீரைப் பருகுவது அவசியம் எனவும் நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.