NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ் நிலையத்தில் வைத்து அதிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு விளக்கமறியல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாடசாலை அதிபருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஒருவரை நாளை மறுதினம் (30) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிக்கடை பொலிஸில் வைத்து குறித்த சந்தேகநபர் தனது காற்சட்டையை கழற்றி, அதிபரை பாலியல் தொல்லை செய்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது பாடசாலைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அதிபர் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, மாநகர சபை உறுப்பினரை பொலிஸுக்கு வரவழைத்து சம்பவம் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சம்பவம் சுமூகமானதையடுத்து இரு தரப்பினரும் பொலிஸாரின் சிறு முறைப்பாடுகள் திணைக்களத்தை விட்டு வெளியேறி உணவகத்திற்குச் சென்றனர். அங்கு குறித்த நபர்; தனது காற்சட்டையை கீழே இறக்கி அதிபரிடம் தனது அந்தரக பகுதியை காட்டியதாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்தே குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share:

Related Articles