NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்ட கீழ் கடுகன்னாவ பகுதி

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்று (08) இரவு 7.30 மணி முதல் இன்று (09) அதிகாலை 01.00 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது.

சீரற்ற வானிலையால் கீழ் கடுகன்னாவ பகுதியின் வீதியில் இருபுறங்களிலும் உள்ள ஆபத்தான கற்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளுக்காகவே அவ்வீதி மூடப்பட்டது.

வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

Share:

Related Articles