NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போதகர் ஜெரோமின் கணக்கில் 1226 கோடி ரூபாய் வைப்பு: நீதிமன்றத்தில் உறுதி!

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கணக்கில் 1226 கோடி ரூபாய் வைப்பிடப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெரோமுக்கு சொந்தமான கட்டுநாயக்கவில் அமைந்துள்ள Miracle Drome நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள 267 சிசிடிவிகள் தொடர்பிலான காட்சிகளை தனியார் தொடர்பாடல் நிறுவனம் ஒன்றிடம் கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது. 

 இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

போதகர் ஜெரோம் மற்றும் அவரது தனியார் நிறுவனத்தின் 12 கணக்குகளில் 1226 கோடி ரூபா பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், Miracle Drome நிறுவகத்தை நிறுவுவதற்கு 6100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles