அரசாங்கத்திடம் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை 8.30 நிலவரப்படி அரசாங்கத்திடம் ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 936 மெற்றிக் தொன் டீசலும் 6 ஆயிரத்து 192 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் 35 ஆயிரத்து 402 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 ரகப் பெற்றோல் மற்றும் 5 அயிரத்து 367 மெற்றிக் தொன் ஒக்டேன் 95 ரகப் பெற்றோல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 30 ஆயிரத்து 173 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தின் எரிபொருள் கையிருப்பு சற்று குறைவாக காணப்பட்ட போதிலும், அது மீளமைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.