அதிநவீன சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளின் வசதியுடன் கூடிய அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் வரவழைக்கப்படுவது இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடியாக மாறியுள்ளது.
இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை செயல்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பாகிஸ்தானின் இராணுவ உளவுத்துறை மற்றும் பிற மாநில அரசியல் பிரமுகர்களின் ஈடுபாடு சர்வதேச சமூகத்தால் இனியும் புறக்கணிக்க முடியாத பகிரங்க ரகசியம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இலங்கை அதிகாரிகள் மூலம் 73.5 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் 2.5 கிலோகிராமுக்கும் அதிகளவில் கொண்டுவந்த பாகிஸ்தான் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டில் ஐஸ் போதைப்பொருள் 614 கிலோகிராம் மற்றும் ஏனைய போதைப்பொருட்கள் 581 கிலோகிராம் படகு ஒன்றின் மூலம் கடத்த முயற்பட்ட போது கைது செய்யப்பட்ட 9 பாகிஸ்தானியர்களுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.
இதற்கு மேலதிகமாக, இந்நாட்டிற்கு கடத்த நியமிக்கப்பட்டிருந்த 80 அமெரிக்க டொலர் பெறுமதியான 86 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்றுக் கொண்டிருந்த பாகிஸ்தான் கப்பல் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவங்கள் பாரிய பிரச்சினையின் ஒரு பகுதியை மாத்திரமே பிரதிபலிக்கின்றன.
போதைப்பொருட்கள் பிரதானமாக ஆப்கானிஸ்தானிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுவதுடன் பாகிஸ்தானில் மக்ரான் கடற்பரப்பில் ஆரம்பிக்கும் ‘ஹேஷ் நெடுஞ்சாலை” என அழைக்கப்படும் கடல் மார்க்கம் வழியாக கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இந்த போதைப்பொருள் வியாபாரம் கொரிடோவில் ரோந்தில் ஈடுபடும் சர்வதேச கடற்படையினர் மூலம் கடந்த இரு வருடங்களுள் இந்திய பெருங்கடலில் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சாட்சிகளின் அடிப்படையில் இந்த பாரிய போதைப்பொருள் ஏற்றுமதிகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு மற்றும் தீவிரவாத குழுக்கள் தொடர்பில் உள்ளமை தெரியவந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கை, உலக சந்தைக்கான ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் ஹெராயினில் முதன்மையான போக்குவரத்துப் புள்ளியாக பாகிஸ்தானை அடையாளம் கண்டுள்ளது.
பாகிஸ்தான் போதைப்பொருள் வலையமைப்பு இலங்கை மற்றும் அதன் அண்டை நாடுகளில் பரவி வருகின்றது.
அண்மையில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ISIS தீவிரவாதிகள் நான்கு பேரும் பாகிஸ்தானியர் ஒருவருடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பை சீர்குலைக்கும் பாகிஸ்தானிய போதைப்பொருள் வலையமைப்புகளை ஒடுக்குவதற்கு சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும் ஒன்றிணைந்த தேவை இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், மானியக் கடன் வழங்கும் நாடாக சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, போதைப்பொருள் மாஃபியா மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களுடன் உறவுகளைத் துண்டிக்க பாகிஸ்தானின் இராணுவத்தை கட்டாயப்படுத்த வேண்டும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மேம்படுத்தப்பட்ட சட்டம், சட்ட அமலாக்க முகவர் மற்றும் சர்வதேச பாதுகாப்பு கூட்டாண்மைகளின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் போதைப்பொருள் வழிமுறைகளை மூடுவதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது அவர்களின் பரிந்துரைகளில் அடங்குகின்றது.
பாகிஸ்தானில் போதைப்பொருள் தீவிரவாதத்திற்கு முகங்கொடுப்பது இந்நாட்டின் நிலைத்தன்மை மற்றும் எதிர்காலத்திற்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமான காரணியாக அமைந்துள்ளது.