மகளிருக்கான ஒருநாள் துடுப்பாட்டக்காரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ICC நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 773 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனா (Smriti Mandhana) ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தையும், இலங்கையின் சமரி அதபத்து 733 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
அதேவேளை, இந்திய அணித்தலைவரான ஹர்மன் ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) ஒரு இடம் பின்தங்கி 15ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் வு20 தரவரிசையில் 12ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 4ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், வு20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.