NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளை கேலி செய்த இளைஞரை கொலை செய்த தந்தை – கிராண்பாஸில் சம்பவம்!

இளைஞர் ஒருவர் தனது மகளை கேலி செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை, குறித்த இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராண்ட்பாஸ் II – நவகம்புர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) குறித்த இளைஞனை கொலை செய்த நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரைக் கொல்லப் பயன்படுத்திய கூரிய கத்தி மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles