NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பலப்பிட்டிய பிரதேசத்தில் சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு பலப்பிட்டிய நீதிமன்றம் கடூழிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

தனது 11 வயது மகளை பல வருடங்களாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தைக்கு, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 110 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், 6 இலட்சம் ரூபாய் நட்டஈடு மற்றும் 80 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான குறித்த நபர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார் என உரகஸ்மஹந்திய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, தனது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்வதாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, தந்தை கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அந்த குற்றச்சாட்டின் பேரில் தந்தையை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் தண்டனைகளையும் விதித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles