NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்து கொன்றவரை சுட்டுக் கொன்ற தாய்!

ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர்இ தனது மகள் அன்னாவை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த வழக்கில் சந்தேக நபரை சுட்டுக்கொலை செய்யும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காணாளி ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் ஆகிய இரு மொழிகளிலும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகின்றது. இது குறித்த பெண்ணின் பலிவாங்கும் செயல் எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

MISBAR உலகளாவிய ரீதியில் சமூக ஊடகங்கள் மற்றும் உள்நாட்டு, சர்வதேச ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மை தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு சுயாதீன அரபு தளமாகும்.

குறித்த காணொளி தொடர்பான உண்மை நிலையை தற்போது MISBAR வெளியிட்டுள்ளது.

இந்த காணொளிக்கும் பலர் ஆதரவு தெரிவித்தும் பலர் விமர்சித்தும் வரும் நிலையில் இது ஒரு திரைப்படத்தின் காட்சி என்ற உண்மை தற்போது ஆதார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

1984ஆம் ஆண்டு வௌியான “நோ டைம் ஃபார் டியர்ஸ் : தி பாக்மியர் கேஸ்” என்ற ஜேர்மன் நாடகத் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

1981இல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கொண்ட வழக்கை அடிப்படையாக கொண்டு திரைப்படமாக உருவாக்கப்பட்டது.

இது கற்பழிப்பு மற்றும் கொலையாளி மீது ஏழு குண்டுகளை துளைத்த ஒரு தாயின் கதையைச் சொல்கிறது. திரைப்படத்தில், கதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையாக மாற்றப்பட்டன.

மரியன்னே பாக்மியர் இன் இந்த வழக்கு, ஜேர்மன் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான Hark Bohmஐ குற்றத்தின் பின்னணியில் உள்ள ஒரு திரைப்படத்தை உருவாக்க தூண்டியதாகவும் அதன் விளைவாக இந்த திரைப்படம் உருவானதாகவும் சித்தரிக்கப்படுகின்றது.

மரியன்னே பாக்மியரின் உண்மையான வழக்கு

மரியன்னே பாக்மியர் ஜூன் 3, 1950 இல் பிறந்தார். மேற்கு ஜெர்மனியின் லோயர் சாக்சனியில் உள்ள ஹில்டெஷெய்முக்கு அருகிலுள்ள சார்ஸ்டெட் என்ற சிறிய நகரத்தில் அவர் வளர்ந்தார்.

நவம்பர் 1972 இல், பாக்மியருக்கு திருமணம் ஆனதோடு தனது மகள் அன்னாவுக்கும் தாயானார்.

காலங்கள் கடந்தது. அன்பாகவும் அழகாகவும் சென்ற அவர்களது வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் நடக்கும் என அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்…

அப்போது அன்னாவுக்கு 7 வயது இருக்கும்… துரதிர்ஷ்டவசமாக, மே 5, 1980 அன்று, கிளாஸ் கிராபோவ்ஸ்கி என்ற நபர் அன்னாவை கடத்தி கொடூரமாக பாலியல் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்தார்.

அவர் அவளை நீண்ட காலமாக, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் இறுதியில் அவளை கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

இதை கண்டறிந்த கிராபோவ்ஸ்கியின் வருங்கால மனைவி, உடனடியாக பொலிஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கிளாஸ் கிராபோவ்ஸ்கி, மார்ச் 6, 1981அன்று, மூன்றாவது நாள் விசாரணையின் போது, அன்னாவின் தாயான Marianne BachMeier, கிளாஸ் கிராபோவ்ஸ்கியை பெரெட்டா 70 ரக துப்பாக்கியை கொண்டு, வழக்கு விசாரணையின் போது சுட்டுக் கொலை செய்தார்.

லூபெக் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிமன்ற அறைக்குள் இந்த சம்பவம் நடந்தது.

அன்னாவின் தாய், கிராபோவ்ஸ்கியின் முதுகில் துப்பாக்கியைக் குறிவைத்து அவனை ஏழு முறை சுட்டாள், இதன்போது கிளாஸ் கிராபோவ்ஸ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்தை தொடர்ந்து, எந்த எதிர்ப்பும் கூறாமல் அமைதியாக பொலிஸாரிடம் அன்னாவின் தாய், Marianne BachMeier சரணடைந்தார்.

இந்த வழக்கு விரைவாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது மற்றும் பொது விவாதத்தையும் அந்நாட்களில் தூண்டியது.

இதன் விளைவாக, Marianne BachMeier கொலை செய்ததற்காகவும், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

விசாரணைகளின் போது, “இதை என் மகள் அன்னாவுக்காக செய்தேன்“ என்பதை தவிர அவர் வேறு எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.

அவளுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் வெளியில் வந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles