(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மழையுடன் காலநிலை காரணமாக மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 77 சதவீதமாகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 44 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக மகாவலி அதிகார சபையின் நீர் கட்டுப்பாட்டு செயலகத்தின் பணிப்பாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
தற்போது பெரும்போகத்தில் பயிர்ச்செய்கைக்கு தண்ணீர் விடும் பணி தொடங்கியுள்ளது.
அதற்கமைய, அடுத்த மாதம் முதலாம் திகதிக்குள் பணிகள் முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி பயிர்ச்செய்கையை ஆரம்பிக்குமாறு மகாவலி அதிகார சபையின் நீர் கட்டுப்பாட்டு செயலகத்தின் பணிப்பாளர் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.