NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை நாம் சீர்குலைக்க மாட்டோம் – ஜனாதிபதி..!

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மலையகம் என அனைத்து மக்களின் அங்கீகாரத்தையும் பெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்கம் தமது அரசாங்கம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அங்கு மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள், வடக்குக்கு தனியான அரசியலையும், கிழக்கு தனியானதொரு அரசியலையும் தெற்கிற்கு தனியானதொரு அரசியலையும்தான் செய்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர்கள் நாட்டு மக்களை பிரிக்கும் அரசியலில்தான் ஈடுபட்டார்கள் எனவும், எவ்வளவு தூரத்திற்கு இவர்கள் மக்களை பிரித்தார்கள் என்றால், யுத்தமொன்று ஏற்படும்வரை பிரித்தார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியானதொரு நாட்டை பெற்றுக் கொடுப்போம் எனக் கூறி குடும்ப அதிகாரத்தால் தேர்தலில் களமிறங்கியவர்களை யாழ் மக்கள் கடந்த தேர்தலில் நிராகரித்ததில் இருந்தே யாழ் மக்கள் பிரிவினையை விரும்பாதவர்கள் என்பது புலப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள்தான் பிரிவினை வாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி விடுகவதாகவும், தென்பகுதியில் இப்போதும் கூட சில அரசியல்வாதிகள் தங்களின் இருப்புக்காக இனவாதத்தை தூண்ட முற்படுகிறார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த அரசியல்வாதிகளுக்கு இனவாதிகள் தேவையாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு தேவையில்லை எனவும் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை நாம் சீர்குலைக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles