NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மடகாஸ்கரில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு !

மடகாஸ்கர் நாட்டில் இந்திய பெருங்கடல் தீவு போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக அந்நாட்டின் பரியா என்ற தேசிய மைதானத்தில் தொடக்க நிகழ்ச்சி இடம்பெற்றது.

குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரசிகர்கள் பலர் திரண்டுள்ளனர்.
சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில்இ திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளததாகவும் 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles