NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா தொடர்பான அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியை இம்முறை திருத்தந்தையின் பிரதிநிதி பேரயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுவள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (28) மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திரு விழாவுக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆயத்த நவ நாட்களை ஆரம்பமாகி, அதனைத்தொடர்ந்து 14ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 15ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்படும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles