காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் தனியார் பஸ்ஸொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (09) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்இ மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதிக்கருகில் உள்ள வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸொன்று முற்றாக தீ பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
இத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.