R.M Sajjath
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 மாவட்டங்களில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வெள்ளம் மற்றும் மண்சரிவால் 26 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், கடும் காற்றினால் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
WEATHER_VOICE
இதேவேளை, சீரற்ற காலநிலையால் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவுல் சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், பல அலுவலக புகையிரதங்களும் தாமதமாக வரலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.