NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதில் புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு…!

மலையக புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மலையக புகையிரத பாதையில் இந்தல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 148/6 மைல்கட்டை பகுதியில் இன்று (06) மாலை 4 மணி அளவில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

பெய்து வரும் கடும் மழையினால் குறித்த புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயங்கும் பயணிகள் மற்றும் சரக்கு புகையிரதங்கள் உரிய பாதையை சீரமைக்கும் வரை நானுஓயா புகையிரத நிலையம் வரை மட்டுமே இயங்கும்.

Share:

Related Articles