NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபான கடைகள் 10 மணி வரை திறந்திருக்கப்பட வேண்டும் – டயனா கமகே MP

மதுபான கடைகளை மதுவரிக்காக குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையாவது திறந்திருக்கப்பட வேண்டும் என பாராளமன்ற உறுப்பினர் டயனா கமகே நேற்று (23) தெரிவித்தார்.

மதுபான கடைகள் இரவு 9 மணிக்கே மூடப்படுவதால் சில பில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் மது வரியை விதித்தாலும் மீண்டும் அதை வசூலிக்க எவ்வித வழிகளும் இல்லை. மதுபானத்தை விற்றால் மட்டுமே அதை மீள வசூலிக்க முடியும். மதுபான கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு பத்து மணிவரையாவது திறந்திருக்கப்பட வேண்டும்.

அப்படியே 9 மணிக்கு மதுக்கடைகளை மூடினால் கூட, மதுவை வாங்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு 9 மணிக்குப் பின் அதை எங்கு எப்படி வாங்க வேண்டும் என்பது தெரியும்”, என அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles