NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபான நிலையங்கள் 3 நாட்களுக்குப் பூட்டு!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான நிலையங்களும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை மூடப்படும் என மதுவரி; திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் மூடத் தவறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles