NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் வெளியான புதிய அட்டவணை…!

டிசம்பர் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கலால் கட்டளைச் சட்டத்தின் 52ஆவது அதிகாரசபையின் உட்பிரிவு 32-1 இன் அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தத் விதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை உரிமத்தின் கீழ் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

இதேவேளை,  வளாகத்தில் மது அருந்துவதற்கான மதுபான விற்பனை நிலையங்கள்  (சுற்றுலா சபையால் அங்கீகரிக்கப்படாத ) காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையும் மற்றும் வளாகத்தில் மது அருந்துவதற்கான மதுபான விற்பனை நிலையங்கள் (சுற்றுலா சபையால் அங்கீகரிக்கப்பட்ட ) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

FL7 மற்றும் FL8 மதுபான உரிமங்களைக் கொண்ட சுற்றுலா சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் (3 நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்கள்) – காலை 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும்.

ஏனைய அனைத்து ஹோட்டல்களும் காலை 10 முதல் 12 மணி வரை திறந்திருக்கும்.

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரங்கள் குறித்த முழு விவரம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles