(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கடந்த வருடம் இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவரொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த சாரதியின் கவனக்குறைவினால் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைலெவல் வீதியில் மீகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மாணவன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (27) உயிரிழந்துள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹெட்டியவத்தைஇ மெகொடவில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குமதுபோதையில் சாரதி ஒருவர் அதிவேகமாக செலுத்திச் சென்ற கார் பாதசாரிகள் இருவர் மீதும்இ கெப் மற்றும் முச்சக்கர வண்டி மீதும் மோதியதில் இந்த மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.