NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாறவுள்ள ஹிட்லரின் வீடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அடோல்ஃப் ஹிட்லரின் வீடு மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்பட இருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றிய அறிவிப்பை ஆஸ்த்ரியாவின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த வாரம் வெளியிட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிட்லரின் வீடானது, நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும் அளவுக்கு புனித தளமாக மாறுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய ஆலோசனை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வியென்னா – வடமேற்கு ஆஸ்த்ரியாவின் பிரௌனாவ் அம் இன் பகுதியில் உள்ள கட்டடத்தில் ஹிட்லர் 3 வயது வரை அங்கு வசித்து வந்தார்.

2016ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த கட்டடத்தை கையகப்படுத்தியதுடன், 2019ஆம் ஆண்டு இந்த கட்டடம் பொலிஸ் நிலையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அறிவிப்பின் படி இந்த கட்டடம் பொலிஸ் நிலையமாக மாற்றப்படவில்லை.

அதனைதொடர்ந்து, ஹிட்லரின் வீடு ஆஸ்த்ரியாவின் மிகப்பெரும் மனித உரிமைகள் ஆணைய அலுவலகம் மற்றும் பயிற்சி மையமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Share:

Related Articles