NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியின் கண் முன்னே கணவர் வெட்டிக் கொலை…!

கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் குடும்பஸ்தரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியான இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 42) சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களுடன் வந்து இறங்கிய நால்வர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து குடும்பஸ்தரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. 

மனைவியின் கண் முன்னால் கணவனைக் குறித்த கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளது. மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அயல்வீட்டுக்காரர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles