NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியின் கத்தி குத்துக்கு இலக்கான கணவன் பலி!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28பி விஜிதபுர பகுதியில் நேற்று (23) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 

விஜித்தபுர மார்காஸ்தோட்டத்தில் தனது வீட்டில் வைத்து கணவன் மனைவிக்கிடையே இரவு 11 மணி அளவில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் மனைவினால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இலக்கம் 28பி விஜிதபுர பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles