NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியுடன் நடனமாடிய இளைஞனை படுகொலை செய்த கணவன்!

இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடங்கொட – ஜன உதான கிராமத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையைச் செய்த சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

களுத்துறை – கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த குறித்த யுவதி, தான் பணியாற்றிய ஆடைத்தொழிற்சாலையின் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞனை கொலைசெய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles