ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றதுடன், அவருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட ஜனாதிபதி மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.
அதேவேளை நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
குறித்த திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிகள் தற்போதும் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மன்னார் விஜயத்தையொட்டி மாவட்டத்தின் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.







