(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மன்னார் – மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 15ஆம் திகதி இடம்பெறுகிறது.
இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றனர்.
இந்த திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மடு திருத்தலத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.