NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் அடையாள கவனயீர்ப்பு முன்னெடுப்பு..!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள்,ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை(26) மதியம் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன் கொட்டும் மழையிலும் அடையாள கவனயீர்ப்பு  ஒன்றை அமைதியான முறையில் வைத்தியசெயற்பாடுகளுக்கு இடையூறு இன்றி மேற் கொண்டுண்டனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பில் இடம் பெற்ற போராட்டத்தின் போது மக்கள் உண்மைகளை அறியாது ஒட்டு மொத்த வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை செயற்பாடு தொடர்பில் அதிருப்தி அடைந்தமையினால் ஏற்பட்டுள்ள மன ரீதியான பாதிப்பு மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை மக்கள் அறிந்து கொள்ள செய்யும் விதமாக குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கை இடம் பெற்றது.

குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையின் போது தாங்கள் குறித்த சம்பவத்தின் போது இடம் பெற்ற முரண்பாடுகளான செயற்பாட்டினால் அப்போதும் இப்போதும் மெளனிகளாக்கப்பட்டுள்ளோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் முகமாக அனைவரும் கறுப்பு துணியினால் வாய்களை கட்டி கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதே நேரம் சமூக  ஊடகங்களே மக்களுக்கு உண்மையை உரையுங்கள், வன்முறைகளை தூண்டாதீர்கள், வைத்தியசாலை அது உங்கள் சொத்து அதை சேதப் படுத்தாதீர்கள்,உயிர்காக்க போராட்டம் அதுதான் எங்கள் சேவையின் பிரதான நோக்கம்,100 பேர் செய்ய வேண்டிய வேலைகளை நாங்கள் 50 பேர் செய்கின்றோம் அதை எப்போதாவது சிந்தித்தீர்களா?,வீண் பழி சுமத்தாதீர்கள் எங்கள் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஏதாவது செய்யுங்கள், வீசி எறியாதீர்கள் எங்களை மட்டுமல்ல எம் மீது உம் சொற்களையும் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடு பட்மை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles