மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்ட யூபிலி ஆண்டை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆடி பெருவிழாவில் (02) இந்த நூற்றாண்டு பெருவிழாவில் சில ஞாபகர்த்தமான நிகழ்வுகளுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படடிருந்தன.
அந்த வகையில் முதலாவது நிகழ்வாக மருதமடு அன்னனையின் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த நவநாட்களில் இறுதிநாளான திங்கள் கிழமை (01) காலை 10 மணியளவில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு தபால் உரையும் 25 ரூபா பெறுமதியான தபால் முத்திரையும் வெளியீடு செய்யப்பட்டன.
இவ் முத்திரை வெளியீடானது மருதமடு ஆலய முன் போடடிக்கோவில் இடம்பெற்றது.
இத் தபால் முத்திரையை தபால்மா அதிபதி எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.றுவான் சத்குமார அவர்கள் மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் கையளித்து வெளியீடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின்போது கிறிஸ்தவ விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துறி பிந்தோ , செயற்பாடு பிரதி தபால் மா அதிபதி டீ.ஏ.ராஜித கே றனசிங்க , வட மாகாண பிரதி தபால் மா அதிபதி திருமதி மதிவதனி வசந்தகுமார் , மன்னார் அஞ்சல் அத்தியட்சகர் நாமல் குமார உட்பட அநுராதபுரம் ஆயர் மேதகு நோபேட் அன்றாடி ஆண்டகை மற்றும் மடு பரிபாலகர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் மன்னார் . யாழ் குரு முதல்வர்கள், மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் , பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் அருட்பணியாளர்கள் அருட்சகோதிரிகள் அருட்சகோதாரர்கன், விழாவுக்காக வருகை தந்திருந்த பெருந்தொகையான பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் முத்திரை வெளியீட்டின்போது தெரிவிக்கப்பட்டதாவது மன்னார் மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்டதில் 1941 ஆம் ஆண்டு வெள்ளி விழாவாகவும், 1974 பொன் விழாவாகவும் , 2000 ஆம் ஆண்டு பவள விழாவாகவும் கொண்டாடப்பட்ட நிலையில், தற்பொழுது யூபிலி விழாவாக இது கொண்டாடப்படுகின்றது எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.