NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலிங்க தேடிய சிறுவனை நேரில் சந்தித்து வாழ்த்திய ரிஷாட் எம்.பி

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் – பிரபல வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவை போன்று பந்து வீசும் பைனாஸ் என்ற சிறுவனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து வாழ்தியதோடு ஒருதொகை பணத்தையும் வழங்கிவைத்தார்.

கடந்த வாரம் – கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றில் பந்து வீசிய பைனாஸின் திறமையை – அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் பிரபல்யமானது.

லசித் மலிங்கவின் பார்வைக்குள்ளும் இந்த வீடியோ அகப்பட்டது. உடனே லசித் மலிங்க – இந்த சிறுவனை தேடத் தொடங்கினார். பின்னர் கண்டுபிடித்தார்.

அவுஸ்திரேலியாவில் தற்போது இருக்கும் மலிங்க – தனது செயலாளர் ஊடாக குறித்த சிறுவனை அனுகியதோடு. ” தான் இலங்கை திரும்பியதும் சந்திப்பதாக” கூறியிருந்தார்.

அதேவேளை – இந்த வீடியோ , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனினும் பைனாஸை சந்திக்க அவரது வீட்டுக்கே சென்றார்.

ஹொரவப்பொத்தானையிலுள்ள பைனாஸின் இல்லம் சென்றடைந்த ரிஷாட் பதியுதீன் – உச்சி முகர்ந்து தனது பாராட்டத்தை தெரிவித்தார்.

பைனாஸின் கல்வி – விளையாட்டு தொடர்பில் கேட்டறிந்த அவர் , ஒரு தொகைப் பணத்தையும் வழங்கி – அவரது விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ய உதவினார்.

விளையாட்டோடு – கல்வியும் முக்கியம் என்பதை கோடிட்டுக்காட்டிய அவர் , கொழும்பில் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்து கல்வியோடு விளையாட்டு துறையிலும் பிரகாசிக்க தன்னால் முடிந்த ஒத்துழைப்பு , உதவிகளை வழங்குவதாக வாக்குறுதி வழங்கினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles