கடிகமுவ – இஹல கோட்ட ரயில் நிலையத்தில் எரிபொருள் புகையிரதத்தின் மீது நேற்று (11) இரவு பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் மலையக புகையிரதச் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரதக்கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால் புகையிரதம் ரம்புக்கனை புகையிரத நிலையத்திலும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர தபால் புகையிரதம் கடுகன்னாவ புகையிரத நிலையத்திலும் நிறுத்தப்பட்டதாக நாவலப்பிட்டி புகையிரதக் கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் போக்குவரத்து புகையிரதத்தின் மீது வீழ்ந்துள்ள பாரிய மரத்தை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக புகையிரதச் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.