தலவாக்கலைக்கும், வட்டகொட புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் டிக்கிரி மெனிகே புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் மலையக புகையிரதம் பாதையில் பயணிக்கும் புகையிரத சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரதத்தை அகற்றும் பணிகள் இன்று இரவுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையக புகையிரதத்தில் பயணித்த பயணிகளும் கடும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.