தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட பெருந்தோட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவு கூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடை பயணம் இன்று மன்னாரில் ஆரம்பித்து எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மாத்தளையில் நிறைவடையவுள்ளது.
மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு என்பன இணைந்து இந்த நடைபயணத்தை முன்னெடுக்கவுள்ளன.