மஸ்கெலியா – மவுசாக்கலை தோட்டப் பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினூடாக அனர்த்த நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, குறித்த மக்களுக்கான சமையல் உபகரணங்கள், ஆடைகள், அவசர மருந்து வகைகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன வழங்கப்படவுள்ளன.
அத்துடன் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப் பைகள் மற்றும் பாதணிகள் என்பவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.