NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சாட்டையால் அடித்து போராட்டம்!

இந்திய சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை தன் காலில் காலணிகள் அணிய மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாளை முதல் 48 நாட்களுக்கு விரதம் அனுஷ்டித்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles