(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மாரடைப்பைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் சுமார் பத்தாயிரம் Tropenin I கருவிகள் மோசமானதால் அவற்றை வைத்தியசாலைகளில் இருந்து அகற்ற சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கருவிகளில் தொழில்நுட்பக் குறைபாடு இருப்பதால் தயாரிப்பு நிறுவனத்தால் சுகாதார அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உரிய கருவிகளை மீண்டும் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை மற்றும் தரம் குறைந்த மருந்துகளுக்கு தர உத்தரவாதம் வழங்கிய தரப்பினரும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.