NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாரவில பிரதேசத்தில் 2 பாடசாலை மாணவர்களை காணவில்லை!

மாரவில பிரதேசத்தில் 2 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இரு மாணவர்களும் நேற்று (19) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதுடன், நாத்தாண்டிய, முட்டிபடிவெல பகுதியைச் சேர்ந்த கவீச மதுசங்க என்ற 15 வயது சிறுவனும், நாத்தாண்டிய, சாகரகம பகுதியை சேர்ந்த லக்ஷான் நிமந்த என்ற 15 வயதுடைய சிறுவனும் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் இருவரும் நாத்தாண்டி பிலாகட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு மாணவர்களிடமிருந்தும் புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை அடுத்து பாடசாலை அதிபர் அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் மாணவன் மனமுடைந்ததாக அவரது தாயார் பொலிஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மாரவில பொலிஸார் காணாமல் போன சிறுவர்களை தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share:

Related Articles