NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Mark Zuckerberg’ ஒரு சிக்கன் – Twitter பதிவிற்கு எலான் பதில் !

கடந்த மாதம் முதல் ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Mark Zuckerberg மற்றும் உலகின் முன்னணி பணக்காரரும், ட்விட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையே முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

தற்போது இருவரும் வெவ்வேறு கருத்துகளை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து Mark Zuckerberg தனது திரெட்ஸ் பக்கத்தில், ‘எலான் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர் இல்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள முடியும். நான் அவருக்காக நேரம் ஒதுக்கினேன். டானா வைட் (அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்ஷிப்பின் தலைவர்), இதனை ஒரு தொண்டு நிறுவனத்தின் முறையான போட்டியாக மாற்ற முயற்சித்தார். ஆனால் எலான் திகதியை உறுதி செய்யவில்லை, பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை தேவை என தெரிவித்துள்ளார். பின்னர் என்னை கொல்லைப்புறத்தில் பயிற்சியை மேற்கொள்ள சொல்கிறார். சரியான திகதிப் பற்றி எலான் எப்போதாவது தீவிரமாக எடுத்துக் கொண்டால், என்னை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இல்லையெனில், கடந்து செல்ல வேண்டிய நேரம் இது. நான் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நபர்களுடன் போட்டியிடுவதில் கவனம் செலுத்தப் போகிறேன்‘ என தெரிவித்துள்ளார்.

இதனை செயின்ட் கிளேர் ஆஷ்லே என்பவர் டுவிட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ‘Mark Zuckerberg’ ஒரு சிக்கன்‘ எனக்கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

Share:

Related Articles