சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய இந்த வருடம் நான்காவது முறையாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சார பாவனையார் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த முன்மொழிவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவிடம் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திருந்த போதும், இந்த ஆண்டு மூன்றாவது முறையாக கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது.குறித்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் மின்கட்டணம் 56 வீதம் அதிகரிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த கட்டண அதிகரிப்பானது சட்டத்திற்கு முரணானது எனவும், இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மின்கட்டணம் 200 வீத அதிகரிப்பாகுமென மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.