NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்து 25 தொழிலாளர்கள் பலி !

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்டை நாடான சீனாவில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள்இ புலம்பெயர்ந்து இங்கு வந்து ஜேட் கணிமத்தை எடுக்கும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஒழுங்குப்படுத்தப்படாத இந்த சுரங்கப் பணியில் ஆண்டுதோறும் ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கனிமத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததுள்ளது. மீட்பு படையினர் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளதோடு மேலும் 14 பேர் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அங்கு பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles