NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் அதிகரிக்கும் மரக்கறி விலை…!

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

கனமழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடியாமல், மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நிலவரப்படி சந்தையில் மரக்கறிகளின் விலை 400 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற முட்டைக் கோஸ் 60 – 80 ரூபா, கரட் 110 -130 ரூபா, லீக்ஸ் 350 – 370 ரூபா, ராபு 80 – 100 ரூபா, இலையுடன் பீட்ரூட் 220 – 240 ரூபா, இலையில்லா பீட்ரூட் 320 – 340 ரூபா, உருளைக் கிழங்கு 210 – 230 ரூபா, உருளை கிழங்கு சிவப்பு 200 – 220 ரூபா, நோக்கோல்100 – 120 ரூபா என விற்பனை, கொள்வனவு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் உயர் தர சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலை கிலோ ஒன்றின் விலை 2300 – 2400 ரூபா, ஐஸ்பேர்க் 3500 – 3600 ரூபா, சலட் இலை1700 – 1800 ரூபா, ப்ரக்கோலி 1500 – 1600 ரூபா, கோலிப்ளவர் 1500 – 1600 ரூபா என்றவாறு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Share:

Related Articles