NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்கு அரசாங்கம் வித்திடுகிறது – சாணக்கியன் MP

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்கு அரசாங்கம் வித்திடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு இன்று (31) துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்தி தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகார பரவலாக்கலில் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முடியும்? தற்போதைய தலைவர்கள் மக்களை காப்பாற்ற முடியாத நிலையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிரத்த ஞாயிறு தாக்குதல் சம்பவமானது அரசியல் இலாபம் ஈட்டும் வகையில் திட்டுமிட்டு செய்யப்பட்ட விடயமாக தற்போது வரையில் பேசப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles