ஆசிய கிண்ண 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4ஆம் திகதி இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதிய போட்டியில் நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வர்னணையாளராக செயல்பட்டார்.
அப்போது மாலை நேரத்தில் மழை வந்து போட்டி நிறுத்தப்பட்டதால் பெவிலியன் நோக்கி போனில் யாரிடமும் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்த அவருடைய காதில் கேட்கும் அளவுக்கு மைதானத்தில் இருந்த ஒரு தரப்பு ரசிகர்கள் ”கோலி கோலி” என்று வேகமாக கூச்சலிட்டு முழங்கினார்கள். அதற்கு அந்த ரசிகர்களுக்கு எதிராக தம்முடைய நடுவிரலை காட்டி கௌதம் கம்பீர் கூலாக நடந்து சென்ற video சமூக வலைதளங்களில் வைரலானது.
முன்னதாக ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் விராட் கோலியை அடிக்கடி விமர்சிப்பதையும் களத்தில் சண்டை போடுவதையும் கௌதம் கம்பீர் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதனால் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை பிடிக்காதவராகவே அறியப்படும் கம்பீர் அவர்களுடைய ரசிகர்களுக்கு எதிராக அப்படி செய்ததில் ஆச்சரியமில்லை என்று நினைத்து அனைவருமே அந்த வீடியோவை உண்மை என்று நம்பி நீங்கள் எல்லாம் ஒரு ஜாம்பவானா? என்று சரமாரியாக திட்டி தீர்த்தார்கள்.
இந்நிலையில் அந்த வீடியோ வைரலானதை பார்த்த கெளதம் கம்பீர் அது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ரசிகர்கள் காஷ்மீர் பிரச்சினையை இணைத்து பேசியதற்காக அவ்வாறு நடுவிரலை காண்பித்ததாக நேரடியாக உண்மையை விளக்கினார்.
குறிப்பாக தம்முடைய நாட்டுக்கு எதிராக யார் பேசினாலும் அவ்வாறுதான் ரியாக்சன் கொடுப்பேன் என்று தைரியமாக சொன்ன அவர் சமூக வலைதளங்களில் வந்தது உண்மையல்ல என தெளிவுபடுத்தினார்.