NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீனவரின் வலையில் சிக்கிய அரிய வகை மீன் – ஒரே இரவில் கோடீஸ்வரரான பாகிஸ்தான் மீன் வியாபாரி

பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள இப்ராஹிம் ஹைதரி மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாஜி பலோச் என்ற மீனவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மீன் வியாபாரி அதே கிராமத்தைச் சேர்ந்த தனது தொழிலாளர்களுடன் கடந்த திங்கட்கிழமை அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றிருந்த்போது அவர்களின் வலையில் தங்க மீன் அல்லது “சோவா” என்று அழைக்கப்படும் அரிய வகை மீன்கள் சிக்கியுள்ளன.

பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ எடை மற்றும் 1.5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படும் மீன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோவா மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால், விலைமதிப்பற்றதாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் நோய்களை குணப்படுத்தும் திறன் பெற்றதுடன், மீனிலுள்ள நூல் போன்ற ஒரு பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அரிய வகை மீன்களை அவர் கராச்சி துறைமுகத்தில் ஏலம் விற்பனையில் விற்பனை செய்து போது, அந்த மீன்கள் 7 கோடி ரூபாவுக்கு ஏலம் போனதுடன், ஒரு மீன் மாத்திரம் 70 இலட்ச ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒரே இரவில் ஹாஜி என்ற மீன் வியாபாரி கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles