ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டதுடன், சூரிய சக்திகள வேலைத்திட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றில் பயனுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்குமாறு வலியுறுத்திய ஜனாதிபதி, ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் செயல்திறன் அற்றவையாக காணப்படும் பட்சத்தில் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
வலுசக்தி அமைச்சர் மின் பொறியியலாளர் குமார ஜயகொடி, இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டீ.எம்.டபிள்யூ.ஜே.பண்டார, இலங்கை மின்சாரம் (தனியார்) நிறுவன தலைவர் பொறியியலாளர் ஜனக அலுத்கே, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ராஜகருணா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.